சமூக ஊடகங்களில் காத்திருக்கும் ஆபத்து ; பெண்கள் குழந்தைகள் அவதானம்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Social Media
By Vironika Aug 26, 2026 10:40 PM GMT
Report

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து பணத்திற்கு விற்பனை செய்யும் இணையவழி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு  தெரிவித்துள்ளது.

சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் இந்த நிலைமை தொடர்பில் பயனர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் காத்திருக்கும் ஆபத்து ; பெண்கள் குழந்தைகள் அவதானம் | Danger Lurking On Social Media

ஆரம்பகட்ட விசாரணை

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்கள், இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சமூக ஊடகக் குழுக்களை ஆய்வு செய்தபோது, போலியான கணக்குகளைப் பயன்படுத்தி நெருங்கிய உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தை உலுக்கிய வெள்ளப் பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

நேபாளத்தை உலுக்கிய வெள்ளப் பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

குறிப்பாக, தமது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையே இவ்வாறு பகிர்ந்து விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

எனவே, குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலிருந்தபடியே இவ்வாறான இணையவழி ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய நிலை காணப்படுவதால், பெற்றோர் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்புகொள்ளும் நண்பர்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறான இணையவழி மோசடிக்கு இலக்காகியிருப்பது அல்லது அதற்கு அடிமையாகியிருப்பது அவதானிக்கப்பட்டால், அவர்களை உளவியல் மற்றும் சமூக ஆலோசனைக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் 1938 மற்றும் 1929 ஆகிய இலவச உதவி தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முழுமையான கவனம் செலுத்தி வருவதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US