யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பு ; உடைந்து விழுந்த கட்டுமானங்கள்
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.
மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன.

வடக்கு மாகாணத்தின் மையத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது.

அதேவேளை நிலவும் சீரற்ற கால நிலையால் கடற்தொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லாது தமது படகுகளை கரைகளில் அணைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் இன்றைய தினம் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை சில மணி நேரம் மாத்திரமே மழை பொழிந்துள்ளது.
அதேநேரம் காலையில் இருந்து தூறலாக மழை பெய்வதுடன் குளிரான கால நிலை நிலவுகின்றது. காற்றும் வீசிய வண்ணமே காணப்படுகிறது.


