நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் : ஐக்கிய மக்கள் சக்தி
சபாநாயகர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்னர் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் சிலவற்றை அரசாங்கம் உள்வாங்கவில்லை என்பதால் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் சபாநாயகர் கட்சிதலைவரின் கூட்டத்தினை கூட்டவேண்டும் என வேண்டுகோள் விடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கியமக்கள் சக்தியின் ஹர்சனராஜகருண தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகளை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உள்வாங்கவில்லை என்பதால் சபாநாயக அந்த சட்டத்தினை அங்கீகரிக்க கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உரிய திருத்தங்களை முன்னெடுக்காமல் சபாநாயகர் தனது அனுமதியை வழங்கினால் நீதித்துறைக்கும் சட்டவாக்கத்திற்கும் இடையில் மோதல் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.