விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு
பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை விகாரை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் கட்டளையொன்றைப் பிறப்பித்துள்ளது.

இன்று பகல் அநுராதபுரம் - ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.
அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக தேரர்கள் கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது அங்கு பொலிஸாருக்கும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. சத்தியாகிரக போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து அங்கு இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.