கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை ; பெண் மற்றும் சிறுமிக்கு நேர்ந்த கதி
குருநாகல் - வாரியபொல, ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 56 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது காயமடைந்த பெண் மற்றும் சிறுமி ஆகிய இருவர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகராறு
இந்த தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை (7) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதால் வீட்டில் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது காயமடைந்த பெண் மற்றும் சிறுமி ஆகிய இருவர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.