ஜூலையில் மாகாண சபைத் தேர்தல்; முன்னாள் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் இல்லாத, தூய்மையான அரசியல் பின்னணியைக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் களமிறக்க அரசாங்கம் (தேசிய மக்கள் சக்தி - NPP) விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
முதற்கட்டமாக 4 மாகாணங்களில் தேர்தல்
அடுத்த ஆண்டு (2027) ஜூலை மாதம் முதற்கட்டமாக நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய 4 மாகாணங்களுக்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடத்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் மாகஆண தேர்தல்களில் மக்கள் ஆதரவு பெற்ற தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே தொடங்கியுள்ளது
அதேவேளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த போது, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.