இலங்கையிலிருந்து சென்ற தம்பதியர் இந்தியாவில் கைது
கொழும்பிலிருந்து பயணம் செய்த தம்பதியினரிடமிருந்து சுமார் ரூ.5 கோடி (இந்திய மதிப்பில்) மதிப்புள்ள கஞ்சாவை மும்பை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா
விமான நிலைய சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவுக்கு இந்தத் தம்பதியினர் தங்கள் பையில் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வருவதாகத் தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் அவர்களின் பைகளைச் சோதனையிட்டபோது, மூன்று மூடப்பட்ட பொதிகளில் சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கள ஆய்வு உபகரணங்களைப் பயன்படுத்திச் சோதிக்கப்பட்டதில், சுமார் 5 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சட்டவிரோத சந்தையில் சுமார் 18 கோடி இலங்கை ரூபாய் என்று தெரிவிக்கப்படுகிறது.