ரயில் பயணிகளுக்கு இலகுவான சேவை ; தனியார் துறைக்கும் ஆன்லைன் பருவச்சீட்டு வசதி

Sri Lanka Sri Lanka Railways Railways
By Sahana Sep 08, 2026 05:06 PM GMT
Report

தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கைத் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சட்டமன்றத்தில் உடல்மொழி சர்ச்சை ; முதலமைச்சர் விஜய் விளக்கம்

சட்டமன்றத்தில் உடல்மொழி சர்ச்சை ; முதலமைச்சர் விஜய் விளக்கம்

இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாகத் தேவைக்கேற்ப மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும்.

இதுவரை அரச துறைக்கு மட்டுமே நடைமுறையிலிருந்த இந்த வசதியைத் தனியார் துறைக்கும் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (08) பத்தரமுல்லைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

ரயில் பயணிகளுக்கு இலகுவான சேவை ; தனியார் துறைக்கும் ஆன்லைன் பருவச்சீட்டு வசதி | Convenient Service Train Passengers Online Ticket

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் பற்றிய பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் கலந்துகொண்டார்.

மாதாந்த பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்போது இதுவரை பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களைக் குறைப்பதே இந்த புதிய முறையின் நோக்கமாகும்.

இதற்கு முன்னர் பருவச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பப் படிவம், புகைப்படம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்ததுடன், குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட நேரத்திற்குள்ளேயே அந்தச் சேவையைப் பெற வேண்டியிருந்தது.

புதிய முறையின் கீழ், பயணிகளின் அடையாளமும் பயனர் கணக்கும் (User account) சரிபார்க்கப்பட்ட பின்னர், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பருவச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு, இலங்கைத் ரயில்வே திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

ரயில் சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பரந்த திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு மிகவும் திறமையான மற்றும் இலகுவான சேவையை வழங்குவதற்கான மற்றொரு கட்டமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது களனிவெலி ரயில் பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களை மையப்படுத்தி ஸ்மார்ட் டிக்கெட் (Smart ticket) முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், ரயில் ஆசனங்களை இணையவழியில் முன்பதிவு செய்யும் வசதிகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் இலவச விசா வசதி இரத்து

இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் இலவச விசா வசதி இரத்து

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US