பயங்கரவாதிகள் ; மன்னார் வைத்தியரின் கடிதத்ததால் வெடித்த சர்ச்சை
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் விநோதன் எழுதிய கடிதம் ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மாவட்டத்திலுள்ள குடும்ப நல உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதத்தில், பெண்ணின் கணவரான முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரை 'பயங்கரவாதிகள்' என குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடியவர்கள் என சமூக வலைதளங்களில் மருத்துவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை மருத்துவரின் கடிதத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களது உரிமைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று எழுதி தமிழ் மக்களது மனங்களைப் புண்படுத்தியமைக்காக வைத்தியர் விநோதன் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
