சீன கப்பல் நிகழ்விற்கு சென்ற எம் பிக்கள் தொடர்பில் கடும் விசனம்!
சீனாவின் உளவுக்கப்பாலன் யுவான் வாங் 5 அம்பாந்தோட்டைக்கு வந்து சேர்ந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், எவருக்கும் அரசியல்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையை நான் மதிக்கின்றேன்.
ஆனால் இதுதேவையற்ற தலையீடு என்பதே எனது தனிப்பட்ட கருத்து. நான் கப்பல் வந்தது குறித்தோ அல்லது வேறு நாடுகள் அதனை எவ்வாறு பார்க்கின்றன என்பது குறித்தோ நான் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் இவ்வாறான உணர்வுபூர்வமான நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டது குறித்தே நான் தெரிவிக்கின்றேன் என்றும் அவர்கள் கலந்துகொண்டது எந்த சம்பந்தமும் இல்லாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சிக் கவிழ்ப்புக்களை மேற்கொள்ள சீனா ஒருபோதும் துணைபோகவில்லை என கப்பல் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
அதேவேளை இந்நிகழ்வில் விமல் வீரவன்ச எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்லர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.