பலாங்கொடை சமனலவத்தையில் என்ன நடக்கிறது: மர்மமான காணாமல் போகும் மனிதர்கள்
இரத்தினபுரி மாவட்டம் - பலாங்கொடையில் உள்ள சமனலவத்தை பகுதியில் 38 வயதான நபர் ஒருவர் கடந்த 08-05-2023 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
இதேவேளை, கடந்த 03-05-2023 ஆம் திகதி 45 வயதான நபர் ஒருவர் காணாமல் போன நிலையில், இதுவரையில் அவர் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை.
மேலும், தொலைப்பேசி அழைப்பு ஒன்று கிடைத்தப் பின்னர் வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதே பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் 9 வயதான சிறுவன் ஒருவர் காணாமல் போய் இருந்த நிலையில், இதுவரையில் அவர் குறித்த விபரங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.
இச் சம்பவங்கள் தொடர்பாக பலாங்கொடை பொலிஸாரின் விசேட குழு ஒன்று விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.