இரு தரப்பினரிடையே மோதல் - இரவில் நேர்ந்த துயரம்
பன்னல பல்லவா பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணொருவரும் இளைஞர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குழுவிற்கும் தெருநாய்களுக்கு உணவளிக்கும் சிலருக்கும் இடையே நேற்று (08) இரவு 8.00 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம்
பண்ணையில் இருந்த பல கோழிகள் தெருநாய்களால் கொல்லப்பட்டதாகக் கூறிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து மோதலாக மாறியுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த ஒரு பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆணும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
46 வயதுடைய பெண்ணும் 30 வயதுடைய ஆணுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக குளியாப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக காயமடைந்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.