அரசியல் தலையீடு காரணமாக நட்டஈடு ரத்து ; பாதிக்கப்பட்ட விவசாயிகள் சோகத்தில்
வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமது வயல் நிலங்களுக்கு இன்னும் நட்டஈடு கிடைக்கவில்லை என தெஹியத்தக்கண்டிய, லிஹினியாகம மற்றும் முருதகஸ்பிட்டிய பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இம்முறை மகா பருவ நெற்செய்கையின் போது ஏற்பட்ட பாதிப்புகளுக்காக வழங்கப்பட்ட நட்டஈட்டுத் தொகையானது, அரசியல் தலையீடுகள் காரணமாக தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உண்மையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இன்னும் எந்த நிதியும் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து பெருமளவிலான விவசாயிகள் தெஹியத்தக்கண்டிய விவசாய சேவை மத்திய நிலையத்தில் முறைப்பாடு சென்றுள்ளனர்.
விவசாயிகளின் இந்த முறைப்பாடு குறித்து பொலன்னறுவை மாவட்ட விவசாய சேவை ஆணையாளர் அருண வீரகோன் கருத்து தெரிவிக்கையில்,
வெள்ளத்தினால் வயல் நிலங்கள் சேதமடைந்த 4,620 விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் ஏற்கனவே 471 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தகுதியான பலருக்கு இந்த நிதி கிடைக்கவில்லை என்ற நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.