இலங்கை பொருளாதாரம் மீள்ச்சியில் மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பு
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக செனல் நியூஸ் ஏசியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கொழும்பு பங்குச் சந்தை மற்றும் இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து சிங்கப்பூரில் ஏற்பாடு செய்த ‘இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா’ முதலீட்டாளர் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் எச். திசாபண்டார உள்ளிட்டோர் பங்கேற்று முக்கிய உரைகளை நிகழ்த்தினர்.
இதற்கிடையில், அமெரிக்காவின் பரஸ்பர கட்டணங்கள் காரணமாக இலங்கையின் ஆடைத் துறையில் சுமார் 16,000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாக கொள்கை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 20,000 புள்ளிகளைத் தாண்டி, வரலாற்று மைல்கல்லை எட்டியது.
இதன்படி, நாள் முழுவதும் சுட்டெண் 289.69 புள்ளிகள் உயர்ந்து, 20,218.36 புள்ளிகளாகப் பதிவாகியது.
இன்றைய வர்த்தகத்தில் 9.54 பில்லியன் ரூபாய் மொத்தப் புரள்வு பதிவாகியது.