நாட்டில் கொரோனா சடலங்களை ஏற்க மறுக்கும் தகனச்சாலைகள்!
எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய ஏற்றுக்கொள்வதில்லை என அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நாட்டில் கோவிட்டால் உயிரிழந்தவர்களின் டசலங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கோவிட்டால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தகன நடவடிக்கைகளுக்கு தேவையான 37.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் கோவிட் தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் எரிவாயு இல்லை என்பதனால் சடலங்களை ஏற்றுக் கொள்ள முடியாதென கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.