யாழ் பல்பொருள் அங்காடியில் பெண்களின் மோசமான செயல்; காட்டிக்கொடுத்த CCTV!
யாழ்ப்பாணம், பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் , பெண் உள்ளிட்ட மூவர் திருட்டில் ஈடுபட்டமை ந்க்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி இல் பதிவாகியுள்ளது.
சுன்னாகம் நகர்ப் பகுதிகளிலுள்ள பல்பொருள் அங்காடிகளிலேயே இவ்வாரு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல்
இதன்போது பெண் உள்ளிட்ட மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல் திருட்டுக்களில் ஈடுபடுவது பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த திருட்டுக்கும்பல் முச்சக்கர வண்டி ஒன்றில் வருவதும் அதனை தூரமாக நிறுத்தி விட்டு இவ்வாறு திருட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.
அதோடு, பல்பொருள் அங்காடியில் பெறுமதியான பொருட்களை திருடி ஆடைகளுக்குள் மறைத்து வைத்து திருடிச் செல்வதும் அங்கு பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு பொலிஸார் பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த கும்பல் தொடர்ச்சியாக இது போன்ற திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் , பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.