சங்கீதா விவாகரத்து விவகாரம் ; முதல் முறையாக மனம் திறந்த நடிகர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தவெகவின் ஏராளமான பெண் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் இதில் பங்கேற்று பேசினார். இந்த நிகழ்வில், மகளிருக்கான தவெகவின் வாக்குறுதிகளை விஜய் மேடையில் அறிவித்தார்.

விவாகரத்து
விவாகரத்து குறித்து விஜய் பேச்சு மேலும், சங்கீதா விவாகரத்து குறித்தும் விஜய் முதல்முறையாக வாய்திறந்தார்.
அதில் அவர், "சமீபத்திய நிறைய பிரச்னைகளில், ஒரு சில பிரச்னைகள் இருக்கிறது அதற்கெல்லாம் போராடி காயப்படுவதை நான் பார்த்தேன், அதையெல்லாம் பார்க்க எனக்கு மனது காயப்படுகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
நாம் எல்லோரும் இணைந்து மக்களின் பிரச்னைகளுக்காக போராடுவோம். நீங்கள் காயப்படாதீர்கள், எனக்கு எந்த வருத்தமும் கிடையாது" என்றார்.
சமீபத்தில், விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வகையில், இதுவரை இதுகுறித்து விஜய் பேசாத நிலையில், இந்த விவகாரம் குறித்து விஜய் தற்போது பேசி உள்ளார்.