பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று நள்ளிரவு 11.59 வரை சில வானூர்தி சேவைகளை இரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் கட்டுநாயக்கவில் இருந்து டுபாய், ரியாத், தோஹா மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்கான சில வானூர்தி சேவைகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயணிகள் தமது வானூர்தி பயணங்களின் தற்போதைய நிலை குறித்த விபரங்களை www.srilankan.com என்ற இணையதளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையிலுள்ள பயணிகள் 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் 0094 11 777 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது வானூர்தி பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்ட முகவரைத் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.