புதிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ; உயர்பீடங்கள் தீர்மானம்!
அசோக ரன்வல இராஜினாமா செய்ததை அடுத்து இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (16) அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை (17ம் திகதி) சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரகசிய வாக்கெடுப்பு
அதேவேளை எதிர்க்கட்சியினாலும் சபாநாயகரின் பெயர் முன்மொழியப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்த போதிலும், அது நெறிமுறையற்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் வேறு பெயர் பரிந்துரைக்கப்பட்டால், அந்த பெயரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன உண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றார்.
அவரது பதவிக்காலம் 26 ஆண்டுகள் ஆகும், அதில் கடந்த 10 ஆண்டுகள் மருத்துவ நிர்வாகி அல்லது மருத்துவமனை பணிப்பாளர் என்ற அதிகாரப்பூர்வ தலைப்பின் கீழ் செலவிடப்பட்டது.
மேலும் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன ,பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் கீழ் 51391 விருப்பு வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார்.