வெளிநாடொன்றில் பள்ளத்தாக்கு பகுதியில் கணவருடன் சடலமாக கிடந்த இலங்கை பெண்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்டோரியாவின் ஹேர்ன்ஸ் ஓக், மெக்ராத்ஸ் டிராக்கில் உள்ள ஒரு வீட்டிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் 47 வயதான பெண் மற்றும் அவரது துணைவரான 46 வயதானவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இருவரது உடல்களையும் வீட்டிற்குள் கண்டெடுத்துள்ளனர்.
சம்பவதினத்தின்று இரவு வீட்டில் இரண்டு பலத்த சத்தங்களைக் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் அவை பட்டாசுகள் அல்லது நரிகளை வேட்டையாடும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் என்றே அவர்கள் கருதியுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது ஒரு கொலை-தற்கொலை சம்பவமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.