நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி பயணித்த கார் விபத்து ; ஒருவர் படுகாயம்
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
இன்று (13.2.2024) அதிகாலை ஒரு மணியளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 15 ஆம் அஞ்சல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
காரின் சாரதி கைது
வைத்தியசாலையில் அனுமதி அளுத்கம, மேல் புளியங்குளிம பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், கார் சென்ற திசையில் சென்ற உழவு இயந்திரத்தின் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் உறுப்பினரின் காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.