அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பகிர வேண்டாம் ; வெளியான அறிவுறுத்த்ல்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்களில் அல்லது ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல்
அத்தகைய செயற்பாடுகள், சிறுவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், அந்த புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளின் கைகளில் சென்று தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கலாம்.
இந்த நிலையில், சிறுவர்களை சுரண்டுதல் மற்றும் ஆட்கடத்தல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அத்தகைய தகவல்களைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.'
அத்துடன், அத்தகைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அல்லது அத்தகைய கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல்கள் இருந்தால், 1929 சிறுவர் உதவி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல்லையேல், அருகிலுள்ள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி அல்லது சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு இது குறித்து அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து, அவர்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.