பொலிஸ் உத்தியோகத்தர்களின் உருட்டுபிரட்டை கண்டறிய கேமரா ஜாக்கெட்!
இலங்கை போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கேமரா ஜாக்கெட் வழங்கப்பட உள்ளது.
அடுத்த வருடம் முதல் வீதிப் பணியில் ஈடுபடும் போது அணியும் பாதுகாப்பு கமராக்களை (Body Worn cameras) வழங்குவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்தி வருகின்றது.
முதற்கட்டமாக இவ்வாறான 1500 கமராக்கள் கொண்டுவரப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கேமராக்கள் எடுக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்படுவதால், காவலர்கள் பணி நேரத்தில் தேவையில்லாத வேலைகளைச் செய்கிறார்களா என்பதை கண்டறிய உதவும் எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.