500 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த கெப் வாகனம் ; பெண் அரச அதிகாரி உட்பட இருவர் பலி
கொத்மலை, கொட்டகேபிட்டிய பகுதியில் இருந்து கடதொர நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், இன்று மாலை சுமார் 6 மணியளவில் 500 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கொட்டகேபிட்டிய வடக்குப் பகுதியைச் சேர்ந்தவரும், கம்பளை நயாபான பகுதியில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய 50 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த சாந்தனி நவரத்னவை மேலதிக சிகிச்சைக்காக 1990 சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கம்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கெப் வாகனத்தின் கீழ் சிக்கி உயிரிழந்த துசித ஹேரத்தின் சடலத்தைப் பள்ளத்திலிருந்து மீட்பதற்காக அட்டபாகை அனர்த்த மீட்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் சடலத்தை மீட்டு வீதிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.