இங்கிலாந்திற்கு எதிராக சாதனை வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை, இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரத்தி பிடித்து வரலாற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரத்தி பிடித்து வரலாற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கடினமான வெற்றியிலக்கு
ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 429 ஓட்டங்களைக் குவித்தது.
430 ஓட்டங்கள் என்ற மிகக் கடினமான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் பவன் ரத்நாயக்க 106 பந்துகளில் 130 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 83 பந்துகளில் 97 ஓட்டங்களையும் குவித்தனர்.
தொடர்ந்து வந்த தசுன் ஷானக்க 50 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ஜனித் லியனகே வெறும் 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 430 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி, ஒரு பந்து மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.