மலைப்பகுதியில் கவிழ்ந்த பேருந்து ; 42 பேர் பலி
தென்னாபிரிக்காவின் மலைப்பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாபிரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரருகே என் 1 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணித்துள்ளது.
தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து
குறித்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் பேருந்து விபத்திற்குள்ளானது.
மலையடிவார பகுதியில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஜிம்பாப்வே மற்றும் மாளவி நாடுகளைச் சேர்ந்தவர்கள் தம் சொந்த ஊருக்கு சென்றபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தையடுத்து அவசரகால குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த பலரை சிகிச்சைக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.