ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம்; திக் ...திக் ...நிமிடங்கள்; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்!
நேபாளம் பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கிய சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது. பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியது.

பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்
எனினும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பாதுகாப்பாக நிறுத்தினார். விமானம் நிறுத்தப்பட்டதும் உடனடியாக பயணிகள் அனைவரும் இதையடுத்து விமானிகள் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக நிறுத்தினர்.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் 901-ல் இருந்த 51 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அந்த விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த விமானம் காத்மாண்டுவில் இருந்து இரவு 8:23 மணிக்கு புறப்பட்டது. விமானம், இரவு 9:08 மணியளவில் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று, விமான ஓடுதளத்திற்கு அருகில் உள்ள புல்வெளிப் பகுதியில் நின்றது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை ஜாப்பாவின் தலைமை மாவட்ட அதிகாரி சிவராம் கெலால் உறுதிப்படுத்தினார்.