சிறுவனுக்கு எமனான இ.போ.ச பேருந்து ; பொலிஸாரின் பிடியில் சாரதி
கேகாலையில் பின்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகும்புர - அருக்கம்மன வீதியில் அன்னாசிகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
கொட்டியாகும்புர நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் 15 வயது சிறுவனும் காயமடைந்துள்ள நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ் சாரதி பின்தெனிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.