வெனிசுலா மீது தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா ; அவசரகால நிலை பிரகடனம்
வெனிசுலா தலைநகர் கராகஸில் குறைந்தது ஏழு குண்டுவெடிப்புகளும், தாழ்வாகப் பறக்கும் விமானங்களும் காணப்பட்ட நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் தாக்குதலைத் தொடங்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அந்நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலை முன்னிட்டு தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

7 இடங்களில் தாக்குதல்கள்
வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது அமெரிக்க சினூக் ஹெலிக்கொப்டர்கள் வெனிசுலாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் சுமார் 7 இடங்களில் இதுவரை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும் வெனிசுவேலாவிலுள்ள எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் சதி என்று வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், வெனிசுவேலா மீதான வான்வழித் தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உள்ளூர்வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆனால், முக்கிய நகரங்களில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதும் அங்குள்ள கட்டமைப்புகளில் தீப்பற்றி எரியும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
BREAKING: Explosions are rocking Caracas, Venezuela while their citizens are sleeping, as it appears the so-called "Peace President" trump is starting a war without Congress' approval.
— BrooklynDad_Defiant!☮️ (@mmpadellan) January 3, 2026
Those Epstein files must be really, really bad.pic.twitter.com/B3qohuQx4Z