யாழ் தையிட்டியில் போராட்டம் ; குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!
யாழ்ப்பாணம் வலி வடக்கில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் பொலிஸாரின் அதிரடியால் தையிட்டியில் சிதைந்த இரசிய திட்டம் ; மற்றுமொரு புத்தர் சிலை நிறுவ முயற்சி
போராட்டத்தில் பெருமளவு மக்கள்
தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அதேவேளை தையிட்டி போராட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் வேலன் சுவாமிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

கடத்த நாட்டகளில் இடம்பெற்ற போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நிலை வேலன் சுவாமிகளை பொலிஸார் தாக்கியதில் அவர் மருத்துமனையில் அனுமத்திக்கபப்ட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

