உங்கள் நாட்டுக்கு செல்; அயர்லாந்தில் கேரள சிறுமி மீது கொடூர தாக்குதல்
அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது கொடூர இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
அந்தரங்க உறுப்பிலும் தாக்குதல்
இந்த நிலையில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த தம்பதியின் 6 வயது மகள் மீது அயர்லாந்து சிறுவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டு என்ற இடத்தில் வசித்து வந்த அனுபா அச்சுதனின் மகளான நியா (6), தங்கள் வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் சிலர் சேர்ந்து நியாவை தாக்கியுள்ளனர்.
நியாவை இந்தியாவுக்கே சென்று விடு என்றும் மிரட்டியதுடன், சிறுமியின் அந்தரங்க உறுப்பிலும் தாக்கியுள்ளனர்.
சிறுமி மீதான இந்தக் கொடூர இனவெறித் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயர்லாந்தில் கடந்த இரு வாரங்களில் மட்டும் இந்தியர்கள் மீது 3 இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.