திருமணம் முடிந்த மறுநாள் மணப்பெண் எஸ்கேப்; தவிக்கும் மணமகன்கள்!
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் முடித்து, மறுநாள் அதிகாலையில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு மணப்பெண் தப்பிச்சென்ற பத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் வீட்டார், திருமணம் முடிந்து மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்க்கையில், வீட்டில் இருந்த பணம், நகைகள் திருடப்பட்டிருப்பதும், மணமகளும் அவரது வீட்டாருக்கு காணாமல் போயிருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்ள் தெரிவித்துள்ளதாவது ,
கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள்
சமூக வலைத்தளங்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் அறிமுகமாகும் இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள், சிறிய கோவில்கள் அல்லது மண்டபங்களில் அவசரமாகத் திருமணத்தை முடித்துவிட்டு, மணமகன் வீட்டிற்குச் செல்கின்றனர்.
அண்மையில், குறித்த மாவட்டத்தில் பிரதீக் ஷர்மா என்ற இளைஞர், ஷோபா என்ற பெண்ணைத் திருமணம் செய்ததாகவும், பின்னர் மணமகனுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, ரூ.4 லட்சம் பணம் மற்றும் நகைகளுடன் மணப்பெண் ஓடிவிட்டதாகவும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் திருமண மோசடி மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் குப்தா என்பவரே தலைமை தாங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர், மணமகளைத் தேடித் தருவதற்காக மணமகன் குடும்பத்தாரிடம் ரூ.1.25 லட்சம் வரை கட்டணமாகவும் பெற்றமையுல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த குழுவினரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.