ஆலயத்திற்கு செல்ல விடவில்லை; சிறுவனின் முடிவால் பெற்றோர் அதிர்ச்சி
மட்டக்களப்பு வவுணதீவு தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. வவுணதீவு சாளம்பங்கேணி பிரதேசத்தில் தாந்தாமலை கோயிலுக்கு போக விடவிலை என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனமுடைந்த சிறுவன்
சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன் சம்பவதினமான நேற்று தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் கோரிய நிலையில் அதற்கு பெற்றோர் இன்று (09) தீர்த்த உற்சவத்துக்கு செல்வதாகவும் அப்போது போகலாம் என தெரிவித்த நிலையில் மனமுடைந்த சிறுவன் உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.
சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.