கொழும்பு போர்ட் சிட்டியில் கடத்தப்பட்ட சீன நாட்டவரின் உடல் கண்டெடுப்பு

China Crime Port City Colombo
By Sahana Jul 24, 2026 03:42 AM GMT
Report

கொழும்பு போர்ட் சிட்டி (துறைமுக நகர) வளாகத்தில் இரண்டு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோதல், கடத்தல் மற்றும் சீன நாட்டவர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

யாழ். செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் கடந்த புதன்கிழமை (22) இரவு இடம்பெற்ற கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட சீன நாட்டவர் ஒருவரின் உடலம் எஹெலியகொட - கரந்தன பகுதியின் வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இயங்கும் சீனக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, கடந்த புதன்கிழமை (22) இரவு 11:00 மணியளவில் மூன்று சீன நாட்டவர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிற்றுந்தில் கொழும்பு போர்ட் சிட்டிக்கு வருகை தந்துள்ளனர்.

கொழும்பு போர்ட் சிட்டியில் கடத்தப்பட்ட சீன நாட்டவரின் உடல் கண்டெடுப்பு | Body Chinese National Kidnapped Colombo Port City

அவர்கள் அங்கிருந்த தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், நேற்று வியாழக்கிழமை (23) அதிகாலை 2:00 மணி முதல் 3:00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் கறுப்பு நிற வேனில் வந்த சுமார் 20 பேர் அடங்கிய சீனக் குழுவினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

குறித்த மூவரையும் துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்திய அந்தக் குழுவினர், அவர்களின் கை, கால்களைக் கட்டி, முகங்களை மூடி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு, இருவரைப் பலவந்தமாகக் கறுப்பு நிற வேனிலும், 'ஹாவோ சோங்' என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபரை வேறொரு வாகனத்திலும் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட இரண்டு சீன நாட்டவர்களும் போர்ட் சிட்டி வளாகத்திலுள்ள வாகனத் தரிப்பிடப் பகுதியில் வாகனத்துடனேயே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டனர்.

அவர்கள் தங்களைச் சுயமாக விடுவித்துக்கொண்டு, தங்களது நண்பர்கள் மூலம் கொழும்பு துறைமுகக் காவல்துறையை அணுகி அதிகாலை 5:00 மணியளவில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதன் பின்னர், நேற்று பிற்பகல் எஹெலியகொட - கரந்தன வனப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டது.

அத்துடன் இந்த உடலத்தை மறைப்பதற்காக அதன் மீது கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தாக்குதலில் தப்பிய இரண்டு சீன நாட்டவர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உடலத்தைப் பார்வையிட்டதில், அது கடத்தப்பட்ட 'ஹாவோ சோங்' என்பவரின் உடலம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில், ஹாவோ சோங்கைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதற்கிடையில், இரண்டு சீன நாட்டவர்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கைவிடப்பட்ட கறுப்பு நிற சிற்றுந்தைச் சோதனையிட்டதில், குண்டுகள் நிரப்பப்பட்ட Glock 44 ரக அரை-தானியங்கி துப்பாக்கி (Semi-automatic pistol) மற்றும் வோக்கி-டோக்கி (Walkie-talkie) சாதனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வேன் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஒருவரது பெயரிலும், பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த சிற்றுந்து கொழும்பு 05-இல் உள்ள நிறுவனமொன்றின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

காயமடைந்த இரு சீன நாட்டவர்களும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது.

உண்மைகளை விரைவாகக் கண்டறிந்து, சீன நாட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை காவல்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் பாதுகாப்பு விழிப்புடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US