பிக் பாஸ் வீட்டில் குயின்ஸின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட இலங்கைப் பெண் ஜனனி!
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சீசன் 6 கடந்த மாதம் அக்டோபர் 9-ம் திகதி கோலகலமாக தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து முதலாவதாக சாந்தி மாஸ்டர் எலிமினேட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஜிபி முத்து தன் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் அசல் கோலாறு வெளியேறினார்.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸில் அந்த டிவி இந்த டிவி என்று டாஸ்க் ஒன்று நடந்து வருகிறது,
இன்றைய தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இறுதியில் ஜனனி சக போட்டியாளரான குயின்ஸின் காலி விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.