மட்டக்களப்பில் பல இலட்சம் பெறுமதியான ஆபத்தான பொருட்கள் மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில், 20 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஐஸ், மற்றும் 25 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் நேற்று (9) இரவு மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனையுடன், பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழு, அம்புறோஸ் வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மூவரை சுற்றிவளைத்து கைதுசெய்தது.
கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.