ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சர் பந்துல வெளியிட்ட கருத்து!

Salary Bandula Gunawardane Teachers
By Shankar Jul 21, 2021 06:48 PM GMT
Shankar

Shankar

Report

அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு செலவிடப்படுவதாகவும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதாயின் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் வரி அதிகரித்தல், அரச சொத்துக்களை விற்பனை செய்தல் அல்லது கடன் வாங்குவதற்கு நேரிடுமென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு கிடைத்த வரி வருமானம் 1,216 பில்லியன் ரூபாய்களாவதுடன், 1,052 பில்லியன் ரூபாய்கள் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு செலுத்திய பின்னர் வரி வருமானத்தில் அரசாங்கத்திற்கு 164 பில்லியன் ரூபாய்கள் மாத்திரமே எஞ்சுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ´வாழ்க்கைச் செலவு, பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு´ தொடர்பாக பொது மக்களைத் தெளிவூட்டும் செய்தியாளர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஆசிரியர் சேவையை இணைந்த சேவையாக மாற்றி சம்பளம் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்து பரந்த உரையாடல் மூலம் ஆசிரியர்கள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்தரையாடலில் கலந்து கொண்ட கலாநிதி பந்துல குணவர்தன உலகில் செல்வந்த, வறுமைப்பட்ட மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட அனைத்து நாடுகளும் சமகால தொற்று நோய் நிலைமையால் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இலங்கை போன்ற சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு இது பொதுவான விடயமென்பதையும் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய ரீதியில் பரவியுள்ள தொற்று நிலைமையால் 04 மில்லியன்களுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூடப்பட்டிருக்கும் இந்நிலைமையில் முழு உலகிலும் விநியோகச் செயன்முறை தடைப்பட்டு உற்பத்தி, நுகர்வு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை அமைச்சர் குறிப்பிட்டுக் கூறினார்.

இத்தொற்று நிலைமையால் உலகம் முழுவதிலும் பசி, போசாக்கின்மை அதிகரித்து வறுமை அதிகரித்துள்ள இவ்வேளையில், இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாட்டிற்கும் நிதி முகாமைத்துவம் கடினமான சவால்மிக்கதாக அமைந்துள்ளதென அமைச்சர் கூறினார்.

அரச நிதி தொடர்பான பிரச்சினை, அந்நிய செலாவணிப் பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி போன்ற முக்கிய பிரச்சினைகள் மூன்றுக்கும் இலங்கை மாத்திரமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளும் முகங்கொடுக்கின்றமையை அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US