ரயில் கழிவறையினுள் மீட்கப்பட்ட குழந்தை தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
சமீபத்தில் ரயில் கழிவறையினுள் இருந்து பச்சிளம் கைக்குழந்தை ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (10-03-2023) கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இரவு பயணித்த ரயில் கழிவறையினுள் இருந்தே குறித்த குழந்தை மீட்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், மீட்கப்பட்ட சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இன்றைய தினம் (17-03-2023) உத்தரவிட்டுள்ளார்.
பிணை வழங்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களான இளம் தம்பதியினருக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னர் குழந்தையை கவனித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி லக்ஷான் டயஸ் தெரிவித்த உண்மைகளை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டி.என்.ஏ அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக குழந்தை மற்றும் சந்தேகநபர்களை எதிர்வரும் 21ம் திகதி அரசு பரிசோதகர் முன் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான செய்திகள்
புகையிரத கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை: பெற்றோருக்கு நேர்ந்த கதி!
அசெளகரியத்திற்கு உள்ளான பெண்: பொலிஸ் பரிசோதருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
கொழும்பு புகையிரத்ததில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் சீக்கினர்!
கோட்டை ரயில் நிலையத்தில் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை; பெண்ணொருவரின் நெகிழவைத்த செயல்!