கோட்டை ரயில் நிலையத்தில் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை; பெண்ணொருவரின் நெகிழவைத்த செயல்!
பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கோட்டையில் ,இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்க இருந்த பாடுமீன் தொடரூந்தின் கழிப்பறையில் இருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த சிசு நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
சிறுவர் வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் மீட்கப்பட்ட பின்னர் குறித்த சிசு, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதேவேளை பெற்ற தாயால் கைவிட்டப்பட்ட அந்த சிசுவை ரயில் நிலையத்தில் மற்றுமொரு பெண் கையில் எடுத்து அரவணைத்து முத்தமிடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இரக்கமற்ற தாயாரால் கைவிடப்பட்ட சிசிவை வேறொரு பெண் எடுத்து முத்தமிடும் காட்சி பெண்மைக்குள் ஒளிந்துள்ள தாயுர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.