மாவீரர் தினத்துக்கென கப்பம் கேட்டவர் கைது
மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மைத்துனனிடம் 15 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்ட, வாழைச்சேனையை சேர்ந்த 41 வயதான மைத்துனன் (மச்சான்) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டு, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் 10 கோடி ரூபாய்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந் ஒருவருக்கு 2021 ம் ஆண்டு அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் 10 கோடி ரூபாய் பணப்பரிசு கிடைத்துள்ளது.
அதிர்ஷ்டலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் ஒரு பங்கை தருமாறு, அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (27) வீட்டுக்குச் சென்ற மைத்துனன். மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளார்.
இதுதொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, கப்பம் கோரிய நபரை பொலிஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.