சிங்களம் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் இனத்தால் மொழியால் நாம் எல்லோரும் தமிழர்கள்!
தமிழர் தாயகத்தில் மட்டிஉமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் நேற்றையதினம் மண் மிட்புக்காய் மடிந்த எமது மாவீரகளின் நினைவேந்தல் பல்லாயிரகணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலிக்கப்பட்டது.
நவம்பர் 27 ஆம் திகதி ஈழமண்மீட்பு போரில் தமது உயிரை ஈந்த எம்மண்ணின் மைந்தர்களை நினைவேந்தும் மாவீரர் நாளாக அனுஸ்டிக்கப்படுகின்றது, அந்தவகையில் வடக்கு , கிழக்கு உள்ளிட்ட தமிழர்பகுதிகளில் மாவீரர் நினைவேந்தல் அனுஸ்டிக்கபப்ட்டிருந்தது.
உணர்வுபூர்வமாக அஞ்சலி
மாவீரர்களை தமிழ் மக்கள் மட்டுமல்லாது வடக்கு கிழக்குவாழ் இஸ்லாமிய சகோதரர்களும் மடிந்த நம் மைந்தர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
தாயகத்தில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான நல்லுறவை சில விசமிகள் சீர்குலைக்க முனைந்தாலும் நேற்றையதினம் மாவீரர் நாளில் இஸ்லாமிய சகோதரர்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தி இருந்தனர்.
இஸ்லாமிய சகோதரர்களுடன், கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண் ஒருவரும் மாவீரர்களுக்காக , அஞ்சலி செலுத்திய நிகழ்வு சிங்கள் அரசிடம் நாம் எட்டோரும் தமிழகள் என்பதை எடுத்துக்கூறும் சாட்டையடியாக அமைந்திருந்தது.
சிங்களம் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் இனத்தால் மொழியால் நாம் எல்லோரும் தமிழர்கள் எனும் ஒற்றுமையை எடுத்துகாட்டுவதாக மாவீரர் தின நினைவேந்தல் அமைந்திர்ருந்தமை குறிப்பிடத்தக்கது.