அர்ச்சுனா எம்பியை கைதுசெய்ய உத்தரவு!
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை நிறுத்தியமை
கடந்த செப்டம்ப மாதம் 29 ஆம் திகதி அர்ச்சுனா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது. எனினும் இன்றைய வழக்கு விசாரணையின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதன் காரணமாக நாடாளும்ன்ற உறுப்பினர் அருச்சுனாவை கைது செய்ய ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.