தமிழ் தலைமைகளின் கைது, JVP அரசின் திட்டமிட்ட செயற்பாடு ; சீறும் தமிழ் தேசியக் கட்சி
கைத்துப்பாக்கி விவகாரமாக இருந்தாலும் மறுபுறம் அவரது கைது இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் புலத்தையும் ஆட்டம் காணச் செய்துள்ளது. அதவது டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆயுதங்களை சட்ட ரீதியாகவே அன்றைய அரசுகள் வழங்கியுள்ளன.
தமிழர் உரிமை போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் தலைவர்களையும் தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களையும் திட்டமிட்ட வகையில் முடக்கும் வகையில் இன்றைய NPP என்ற போர்வைக்குக் தன்னை மூடிக்கொண்டிருக்கும் அனுர தலைமையிலான JVP அரசு முன்னெடுத்து வருவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கட்சியின் உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைவர்கள் கைது
தமிழ் தலைவர்களை இன்றைய அரசு கைது செய்துவருவது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்
தமிழ் அரசியல் பரப்பில் இருக்கும் வரலாற்றைக் கொண்ட முக்கிய மூத்த தலைவரான முன்னாள் அமைசர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டமை இன்று பெரும் பேசுபொருளாக இருக்கின்றது.
இது கைத்துப்பாக்கி விவகாரமாக இருந்தாலும் மறுபுறம் அவரது கைது இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் புலத்தையும் ஆட்டம் காணச் செய்துள்ளது. அதவது டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆயுதங்களை சட்ட ரீதியாகவே அன்றைய அரசுகள் வழங்கியுள்ளன. அதை அவர் வெளிப்படையாகவே கூறுயுள்ளார்.
அவரின் இந்த கைதானது இலங்கையின் இராணுவத்தை இன்றைய அரசு பொலிசாரைக் கொண்டு காட்டிக் கொடுப்பதான ஒன்றாகவே இருக்கின்றது. இதே நேரம் அவரது கைதை விசாரிக்க வேண்டுமானால் இலங்கை இராணுவம், அன்றைய பாதுகாப்பு அமைச்சர்கள், ஜனாதிபதிகள் என பலரை நீதிமன்றின் முன் கொண்டுசெல்ல வைக்கவுள்ளது.
இதனால் இன்று அவரது கைதை எண்ணி அனுர அரசு தடுமாறத் தொடங்கிவிட்டது. அடுத்த வாரம் அவர் பிணையில் விடுவிக்கப்படு விடுவார், சில நேரம் இந்த வழக்கு இல்லாமலும் போய்விடும்.
ஆனால் டக்ளஸ் தேவானந்தாவினது கைது தமிழ் மக்களுக்கான வாக்குமூலமாக இன்று மாறும் நிலைக்கு சென்றுள்ளது. பிள்ளையான, டக்ளஸ் தேவானந்தாவோ யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் மூத்த வரலாற்றைக் கொண்ட தலைவர்களை கைது செய்யும் போது வெடி கொழுத்தி கொண்டாடுவது எமது இனத்தை கொச்சைப்படுத்தும் ஒன்றாக இரும்கும் என எண்டுகின்றேன்.
சரி பிழைகளை சட்டம் ஆராயட்டும். ஆனால் இவ்வாறானவர்களை கைது செய்யும் போது வெடி கொழுத்தி தமிழ் மக்கள் கொண்டாடினால் அனுர அரசு தாம் திட்டமிட்டுச் செய்யும் அனைத்தும் சரி என்றும் அதை மக்கள் சந்தோசத்துடன் கொண்டாடுகின்றார்கள் என்றும் வெளிப்படுத்தி இன்னும் பலவற்றை செய்ய முற்படுவர்.
குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா இன்று, நாளை சில சமயம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலனாதன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சந்திரகுமார் மட்டுமல்ல அரசிதல் கட்சிகளின் தலைவர்களையும் முடக்க இந்த அரசு முயலும்.
எனவே NPP அரசின் இந்த திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் இலங்கையிலும் வெளி நாடுகளிலும் வெடி கொளுத்துவோர் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலுயுறுத்தினார்