கொழும்பு - பொறள்ளை துப்பாக்கி சூட்டில் தொடரும் கைதுகள்
கொழும்பு - பொறள்ளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு (04) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை ஆறு பேர் கைது
கடந்த ஜூன் மாதம் 04ஆம் திகதி நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மற்றும் பொறள்ளை பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் வெல்லம்பிட்டியில் உள்ள சிரிசர உயண மற்றும் சேதவத்தை ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 மற்றும் 19 வயதுடைய பொறள்ளை மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைதானவர்களில் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.