மட்டக்களப்பில் கடும் மழை; கிரான் பாலத்தினை ஊடறுத்து பாயும் வெள்ளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன மழையால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளதுடன் போக்குவரத்துப் பாதைகளிலும் நீர் தேங்க ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்யக்கூடும்
அதேவேளை வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில் பாலியல் அத்துமீறல்கள்; கண்டுகொள்ளாத நிர்வாகம்; களமிறங்கிய சிஐடி!
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
எனவே இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.