இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்தால் ஏற்பட்ட சர்ச்சை... மகன் வெளியிட்ட விளக்கம்
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான வலம்வரும் ஏ.ஆர்.ரஹ்மான் சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி சாயிராவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அறிவித்த சில மணித்தியாலத்திற்கு பிறகு அவரது இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டே என்பவரும் கணவரைப் பிரிவதாக அறிவித்தார்.
இந்த செய்தி வைரலான பிறகு ரஹ்மான் விவாகரத்துக்கு அந்த பெண் தான் காரணமா என சமூக வலைதளங்களில் பல சர்ச்சையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் அந்த பெண்ணுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என சாயிராவின் வழக்கறிஞர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதற்கு பல சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலே பரப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இன்ஸ்டாகிராமில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது பதிவில், என் அப்பா ஒரு லெஜெண்ட், திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்களால் மட்டுமல்ல, அவர் பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த மரியாதை, மதிப்பு மற்றும் அன்பு தான் காரணம்.
அவரைப் பற்றி பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதைப் பார்க்கும்போது மனமுடைகிறது.
ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும், அவரின் கண்ணியத்தை மதித்து அதனைக் காக்க வேண்டும்.
எல்லா புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.அமீன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.