அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (04) விற்பனை விலையில் சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 92 சதம், விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 88 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437ரூபாய் 13 சதம், விற்பனைப் பெறுமதி 451ரூபா 63 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 388ரூபாய் 47 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 415 ரூபாய் 10சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233ரூபா 69 சதம், விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 45சதமாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய் 34சதம், விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 08என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254 ரூபாய் 03 சதம், விற்பனைப் பெறுமதி 264 ரூபாய் 43 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 06 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 14 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.