இலக்கத் தகடு இல்லாத மற்றுமொரு சொகுசு வாகனம் ; பொய் கூறிய உரிமையாளர்
இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இந்த சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.