மேலும் வீழ்ச்சியில் இலங்கை
உலகளாவிய தரமதிப்பீட்டு நிறுவனமான S&P இலங்கையின் பத்திர மதிப்பீட்டை ‘D’ ஆக குறைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பத்திரங்களை செலுத்தத் தவறிய இலங்கை, இதுவரை தனியார் கடனாளிகளிடமிருந்து 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
‘D’ என்பது S&P நிறுவனம் ஒரு பத்திரத்திற்கு வழங்கும் மிகக் குறைந்த தரமாகும். முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அதிக வட்டி விகிதம் வழங்கப்பட்டாலும், ‘D’ தர பத்திரம் அதிக ஆபத்துள்ள முதலீட்டு மண்டலத்திற்கு சொந்தமானதாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் சில முதலீட்டாளர்கள் ‘டி’ தர பத்திரங்களின் உயர்வால் முதலீடு செய்யத் தயங்குகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.