அனந்தி சசிதரனை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்!
வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan) மீது நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று வட்டு. இந்துக்கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளின் பயணித்துக்கொண்டிருந்தபோது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
விபத்தினால் பலத்த பாதிப்புக்களை சந்தித்த அவர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று விபத்துத் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததுடன் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் இலக்கத்தினையும் அறிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் இன்றுவரையிலும் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அனந்தி தெரிவித்தார்.